புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: வியாழன், 24 ஜனவரி 2019 (11:19 IST)

ஒற்றை போட்டாவால் அதிர்ந்து போன ஹன்சிகா!

பழகுவதில் கட்டி கரும்பாக காணப்பட்ட ஹன்சிகாவை கடும் ஆத்திரப்பட வைத்துவிட்டார்கள் இணைய ஹேக்கர்கள்.



குடும்ப குத்துவிளக்காக , ஹோம்லி கேர்ள் ஆக இருந்தவரை 10  மணி காட்சி போஸ்டர் ஆக்கிவிட்டார்கள் சில பாவிகள். நேற்று அரை குறை ஆடையுடன் ஹன்சிகா ஆபாசமாக காணப்பட்ட போட்டோவை அவரது சமுக வலைதள பக்கத்தில் வெளியிட்டு விட்டார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த ஹன்சிகா, தனது போன் டுவிட்டர் ஹேக் செய்யப்பட்டு விட்டதாகவும், எனவே என் டுவிட்டர் பக்கத்தில் வந்த தவறான மெசேஜ்களை இனி நம்பாதீங்க என்றும் கேட்டுக்கொண்டார்.


மேலும் தொழில் நுட்ப குழு சரிசெய்யும் பணி நடந்து வருவதாகவும் ஹன்சிகா கூறியுள்ளார்.