வியாழன், 2 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 14 டிசம்பர் 2018 (10:03 IST)

ஹன்சிகா மீது வழக்கு போட்ட பிரபல அரசியல் கட்சி! காரணம்?

நடிகை ஹன்சிகா மீது  பா.ம.க பிரமுகர் வழக்கு தொடுத்துள்ளார். 


 
ஹன்சிகா நடிப்பில் இயக்குனர் ஜமீல் இயக்கி வரும் படம் 'மஹா'. இந்த படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அதில், ஹன்சிகா ஒரு சாமியார் போல, வேடமணிந்து கஞ்சா அடிப்பது போல வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்த போஸ்டர் பல தரப்பினரை அதிர்ச்சியடைய வைத்தது. 
 
இந்நிலையில் தற்போது,  பா.ம.க கட்சியை சேர்ந்த ஜானகி ராமன் மஹா படத்தின் போஸ்டருக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளார். இந்த படத்தின் போஸ்டர் இந்துக்களின் மத நம்பிக்கைகளை புண்படுத்துவதாக உள்ளதாகவும், மாணவிகளை திசை திருப்பும் விதமாக உள்ளதாகவும் புகார் அளித்துள்ளார். 


 
மேலும் , நடிகை ஹன்சிகா மற்றும் படத்தின் இயக்குனர் ஜலீல் மீதும் நடவடிக்கை எடுக்கவும்  பா.ம.க பிரமுகர் வழக்கு தொடுத்துள்ளார்.