வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 26 நவம்பர் 2022 (20:59 IST)

''துணிவு '' பட அப்டேட் கொடுத்த இசையமைப்பாளர் ஜிப்ரான்! வைரலாகும் போட்டோ

thunivu second
நடிகர் அஜித்தின் துணிவு படத்தின் புதிய அப்டேட் வெளியிட்டுள்ளார் இசையமைப்பாளர் ஜிப்ரான்.

இந்த ஆண்டின் அதிக எதிர்ப்பார்பை ஏற்படுத்தியுள்ள படம் துணிவு. அஜித் ஆக்சன் காட்சிகளின் மிரட்டியுள்ளதாகக் கூறப்படும் இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து, இப்படத்தின் டப்பிங், இசைகோர்ப்பு உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது.

அஜித் நடித்த துணிவு திரைப்படம் மற்றும் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் ஆகிய இரண்டும் பொங்கல் திருநாளில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் இப்போது துணிவு படத்தை வாங்கியுள்ள ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம், தியேட்டர்களை ஒப்பந்தம் செய்யும் பணிகளை ஆரம்பித்துள்ளது. புறநகர் பகுதிகளில் கூட பல திரையரங்குகள் பொங்கலுக்கு தங்கள் தியேட்டரில் துணிவு ரிலீஸ் ஆவதை உறுதி செய்துள்ளனர்.

இந்நிலையில்தான் ஒட்டுமொத்த வெளிநாட்டு ரிலீஸ் உரிமையையும் லைகா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்த நிலையில், இன்று இப்படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் தன் டுவிட்டர் பக்கத்தில்,   நடிகை மஞ்சு வாரியர் குரலில் பாடல்  ரெக்கார்டிங் செய்யும்போது எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இப்புகைப்படம் வைரலாகி வருகிறது. 
 

மஞ்சு வாரியரும் ஒரு பாடல் பாடியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 



Edited by Sinoj