வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 24 நவம்பர் 2022 (19:04 IST)

கனவில் கூட வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகம் தான் வருகிறது - நடிகர் சூரி

கனவில் கூட வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகம் தான் வருவதாக   நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர் சூரி, சென்னை அடையாறு போலீஸ் நிலையத்தில்  புகார் மனு ஒன்றைக் கொடுத்திருந்தார். அதில், சிறுசேரியில் இடம் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.2. 70 கோடி  பண மொசடி செய்துவிட்டதாக முன்னாள் டிஜிபியும், நடிகர் விஷ்ணுவிஷாலின தந்தையுமான ரமேஷ்கொடவாலா , சினிமா தயாரிப்பாளார் அன்பு வேல்ராஜன் மீது அந்த மனுவில் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்தப் புகாரை ரமேஷ்கொடவாலா மறுத்தார். இந்த புகார் மனு தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி 6 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சூரியின் இந்தப் புகாரை மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷ்னர் மீனா விசாரித்து வருகிறார்.   இந்த விசாரணையில் சூரியிடம்  ஏப்ரல் மாதம்  பல கேள்விகள்  கேட்கப்பட்டது.  அப்போது வீடியோ பதிவும் செய்யப்பட்டது.

அதேபோல்,  முன்னாள் டிஜிபியும், நடிகர் விஷ்ணுவிஷாலின தந்தையுமான ரமேஷ்கொடவாலா , சினிமா தயாரிப்பாளார் அன்பு வேல்ராஜன் ஆகிய இருவரிடமும் விசாரணை  நடத்தப்பட்டது.

 
இருப்பினும் இந்த வழக்கு விசாரணை முன்னேற்றம் இல்லாதததால் சிபிஐ விசாரரணைக்கு உத்தர வேண்டும் என சூரி மனு தாக்கல் செய்திருந்தார். எனவே, ஆறு மாத்திற்குள் இந்த வழக்கை முடிக்க வேண்டுமென சென்னை நீதிமன்ற, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ்சாரின் விசாரணைக்கு உத்தரவிட்டது.

இந்த நிலையில், தற்போது விடுதலை படத்தில் ஹீரோவாக நடித்து வரும் சூரி, தனக்குக் கனவில் கூட வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகம் தான் வருவதாகவும் நியாயம் கிடைக்கும் என்று நம்புவதாகவும், வீட்டை விட்டு வெளியே போகும்போது, ஷூட்டிங்கா என்று கேட்ட  நிலை மாறி தற்போது, காவல் நிலையத்திற்கா என குழந்தைகள் கேட்பதாகக் கூறியுள்ளார்.



Edited by Sinoj