வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 24 நவம்பர் 2022 (15:32 IST)

மீண்டும் கமலுக்கு வில்லனாகும் நடிகர் விஜய் சேதுபதி!

ஹெச் வினோத் தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித் நடிப்பில் உருவாகி வரும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்துக்குப் பிறகு அவர் இயக்கும் படம் பற்றிய தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளன. அதன் படி விஜய் சேதுபதியை வினோத் தனது அடுத்த படத்தில் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இப்போது அவர், நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்துக்காக ஒரு படம் இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தில் கமல்ஹாசன் நடிக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த படம் கமல்- மணிரத்னம் இணையும் படத்துக்கு முன்பாகவே உருவாகும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் அவர் வில்லனாக நடிக்க, அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.