திங்கள், 13 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 24 டிசம்பர் 2024 (14:45 IST)

பான் இந்தியா படமாக உருவாகும் த்ரிஷ்யம் 3… மோகன்லால் கொடுத்த அப்டேட்!

மோகன் லால், மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான திரிஷ்யம் திரைப்படம் இந்தியாவின் பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. 2015 ஆம் ஆண்டு வெளியான திருஷ்யம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதுமட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு , கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் இந்தியைத் தவிர மற்ற மொழிகளில் எல்லாம் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது.

இதையடுத்து 2020 ஆம் ஆண்டு திரிஷ்யம் 2 ஆம் பாகம் வெளியாகி நேரடியாக ஓடிடியில் வெளியானது. இந்த பாகமும் வெற்றி பெற்று தமிழைத் தவிர பிற மொழிகளில் எல்லாம் ரீமேக் செய்யப்பட்டது. இந்நிலையில் இப்போது மூன்றாம் பாகத்துக்கான வேலைகள் தொடங்கியுள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் பர்ரோஸ் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மோகன்லால் “த்ரிஷ்யம் 3 படத்தின் வேலைகள் விரைவில் தொடங்கவுள்ளன. மூன்றாம் பாகம் பான் இந்தியா படமாக உருவாகும்” எனக் கூறியுள்ளார்.