1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 11 டிசம்பர் 2024 (15:35 IST)

பணம், நேரம் இரண்டையும் நாம் மதித்தால் அவை நம்மை மதிக்கும்… மீனாட்சி சௌத்ரியின் வாழ்க்கைத் தத்துவம்!

சமீபகால இளம் சென்சேஷன் நடிகையாக உருவாகி வருகிறார் மீனாட்சி சௌத்ரி.  தெலுங்கு சினிமாவில் முதல் முதலாக அறிமுகமான மீனாட்சி சௌத்ரி ஹிட், கில்லாடி மற்றும் குண்டூர் காரம் ஆகிய படங்களின் மூலம் கவனம் பெற்றார்.

அதன் பின்னர் தமிழில் ஆர் ஜே பாலாஜி நடித்த சிங்கப்பூர் சலூன் இவரின் முதல் படமாக அமைந்தது. இரண்டாவது படமே விஜய்யுடன் கோட் படத்தில் நடித்தார். தீபாவளிக்கு ரிலீஸான லக்கி பாஸ்கர் படம் 100 கோடி ரூபாய் வசூலித்து இவரை இப்போது மோஸ்ட் வாண்டட் நடிகையாக்கியுள்ளது.

பேட்மிண்ட்டன் வீராங்கனையான இவர் ஹீரோயின் ஆனதே எதிர்பாராதது எனக் கூறியுள்ளார். மேலும் “நாம் பணம் மற்றும் நேரம் ஆகியவற்றை மதித்தால் அவை நம்மைத் திரும்ப மதிக்கும். நான் என் வாழ்க்கையில் இவற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.