ஞாயிறு, 29 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 5 ஜூலை 2023 (17:17 IST)

வடிவேலுவை சந்தித்த அமைச்சர் உதயநிதி! வைரலாகும் வீடியோ

MAAMANNAN
மாமன்னன் படத்தில்  நடித்திருந்த நடிகர் வடிவேலுவை நடிகரும் அமைச்சருமான உதயநிதி நேரில் சந்தித்துள்ளார்.

உதயநிதி நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மாமன்னன். இத்திரைப்படத்தில் வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர்  முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு  ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

இப்படம் வெளியாகும் முன்பு பல சர்ச்சைகள் இருந்த நிலையில்,   நேற்று முன் தினம் ரிலீஸ்  ஆன மாமன்னன் படம்  நேர்மறையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இதனால் படக்குழு மகிழ்ச்சியடைந்து, இப்படத்தின் வெற்றியைக் கொண்டாடினர். இப்படத்ததை முதல்வர் முக.ஸ்டாலின், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பலரும் பராட்டியிருந்தனர்.

இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வசூல் குவித்து வரும் நிலையில், இன்று மாமன்னன் படத்தில் முக்கிய கேரக்டரில்  நடித்திருந்த நடிகர் வடிவேலுவை நடிகரும் அமைச்சருமான உதயநிதி நேரில் சந்தித்துள்ளார்.

இதுகுறித்து உதயநிதி தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:'' தன் எதார்த்த மற்றும் தேர்ந்த நடிப்பால் #மாமன்னன் திரைப்படத்தை மானுடம் போற்றும் சாதனைப் படைப்பாக்கிய  அண்ணன் வடிவேலு அவர்களை நேரில் சந்தித்து அன்பையும், நன்றியையும் தெரிவித்தோம்'' என்று தெரிவித்து, நடிகர் வடிவேலுவை சந்தித்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

மாமன்னன் பட வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜுக்கு நடிகர் உதயநிதி மினி கூப்பர் காரை பரிசளித்தது குறிப்பிடத்தக்கது.