1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 1 ஜூலை 2023 (08:11 IST)

கார்ர்ட்டூன் பட போஸ்டர் போல இருக்கு… சந்திரமுகி 2 –ஐக் கலாய்த்த பிரபல விமர்சகர்!

2005 ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாக்கத்தில் உள்ளது. லாரன்ஸ், வடிவேலு, ராதிகா சரத்குமார் மற்றும் கங்கனா ரனாவத் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். மரகதமணி இசையமைக்கிறார். முதல் பாகத்தை இயக்கிய பி வாசுவே இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார்.

இந்த படத்தின் ஷுட்டிங் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் இப்போது படத்தின் ரிலீஸ் வேலைகள் நடந்து வருகின்றன. அந்த வகையில் படத்தின் வெளியீடு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு என படக்குழு அறிவித்து போஸ்டர் ஒன்றை ரிலீஸ் செய்திருந்தனர்.

ஆனால் அந்த போஸ்டர் பெரியளவில் ரசிகர்களைக் கவரவில்லை. இந்நிலையில் பிரபல யுட்யூப் விமர்சகரான ப்ளூசட்ட மாறன் படத்தின் போஸ்டரை ‘ஏதோ கார்ட்டூன் பட போஸ்டர் போல இருப்பதாக’ சொல்லி கலாய்த்துள்ளார்.