1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 4 ஜூலை 2023 (19:33 IST)

''மாமன்னன் படத்தின் நெகட்டிவ் இதுதான்''- உதயநிதி பகிர்ந்த வீடியோ

maamannan
உதயநிதி நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மாமன்னன். இத்திரைப்படத்தில் வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர்  முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு  ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

இப்படம் வெளியாகும் முன்பு பல சர்ச்சைகள் இருந்த நிலையில்,   நேற்று முன் தினம் ரிலீஸ்  ஆன மாமன்னன் படம்  நேர்மறையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இதனால் படக்குழு மகிழ்ச்சியடைந்து, இன்று இப்படத்தின் வெற்றியைக் கொண்டாடினர். இப்படத்ததை முதல்வர் முக.ஸ்டாலின், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பலரும் பராட்டியிருந்தனர்.

இப்படத்தின் வெற்றியை  அடுத்து,  இயக்குனர் மாரி செல்வராஜுக்கு மினி கூப்பர் காரை உதயநிதி பரிசளித்தார்.

இந்தப் படத்தைப் பார்த்த காத்து கருப்பு என்பவரிடம் இப்படம் பற்றி கருத்து கேட்கப்பட்டது. அதற்கு அவர், ''படத்துல நெகட்டிவ்வா தெரிஞ்சது வந்து…ஆப்போசிட்ல ஒருத்தங்க உட்கார்ந்திருந்தாங்க..அவுங்க  பாப்கார்ன் சாப்பிட்டு, சீட்ட இப்படி அப்படி நகர்த்திட்டு, எரிச்சலா இருந்துகுது, சேருல உட்காருன்னு சொன்னா. சீட்டுல உட்காரல …
இதுதான் எனக்கு படத்துல எனக்கு மைனஸா தெரிஞ்சுது'' என்று கூறினார்.

இப்படத்தைப் பற்றி கேட்டால் பக்கத்தில் உட்கார்ந்தவர் பற்றி கூறிய இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில்  நடிகரும் அமைச்சருமான உதய நிதி ஸ்டாலின் தன் டிவிட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்து, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலருக்கும் இதை டேக் செய்துள்ளார்.