ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 27 ஜூலை 2021 (16:02 IST)

ஓடிடி வெளியிட்டுக்கு முன்பே வெளியான பைரஸி… அதிர்ச்சியில் படக்குழு!

இந்தியில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்ட மிமி என்ற படம் நெட்பிளிக்ஸில் ஜூலை 30 ஆம் தேதி ரிலிஸாவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

நடிகை க்ரித்தி சனோன் மற்றும் பங்கஜ் த்ரிபாதி நடிப்பில் உருவான திரைப்படம் மிமி.  ஒரு நடனப்பெண்ணின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவான இந்த படம் நெட்பிளிக்ஸில் வெளியாவதாக இருந்தது. இந்த படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். சமீபத்தில் வெளியான பரமசுந்தரி பாடல் இணையத்தில் வைரல் ஹிட்டானது.

இந்நிலையில் 30 ஆம் தேதி ஓடிடியில் வெளியாவதாக இருந்த அந்த திரைப்படம் நேற்று சில பைரஸி தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து படக்குழு நேற்றே இந்த படத்தை நெட்பிளிக்ஸில் ரிலிஸ் செய்தது.