ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 27 ஜூலை 2021 (11:12 IST)

சீரியல் படப்பிடிப்பில் கலந்துகொண்ட குஷ்பு!

நடிகை குஷ்பு தேர்தலுக்கு முன்பாக பாஜகவில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

நடிகை குஷ்பு அரசியலில் இறங்கியதில் இருந்து திமுக மற்றும் காங்கிரஸ் ஆகியக் கட்சிகளில் சில காலம் இருந்துவிட்டு தேர்தல் சமயத்தில் பாஜகவில் ஐக்கியம் ஆனார். எந்த கட்சியிலும் கடுமையாக உழைக்காமல் பதவிக்காக கட்சி மாறிக்கொண்டே இருப்பதுதான் குஷ்புவின் வழக்கம் என்று கேலிகளும் மீம்ஸ்களும் பரவின.  பாஜகவில் அவருக்கு சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி ஒதுக்கப்பட்டது. ஆனால் படுதோல்வியை சந்தித்தார்.

தோல்வியால் துவண்டிருந்த அவர் பாஜகவில் ஏதேனும் முக்கியப் பொறுப்பு வழங்கப்படலாம் என ஆசையில் இருந்துள்ளார். சமீபத்தில் தமிழக பாஜக தலைவராக இருந்த எல் முருகன் ஒன்றிய இணை அமைச்சராக பதவியேற்றதை அடுத்து அந்த பதவி தனக்கு வரும் என்று காத்திருந்தாராம். ஆனால் அதுவும் கிடைக்காமல் அண்ணாமலைக்கு கிடைத்ததும் அதிருப்தியாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒரு சீரியலில் நடிக்க வந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. இதையடுத்து இப்போது கோகுலத்தில் சீதை என்ற சீரியலின் படப்பிடிப்பு தளத்தில் அவர் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.