புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 27 ஜூலை 2021 (14:01 IST)

தமிழகத்தில் 1 லட்சத்திற்கு மேற்பட்ட கர்ப்பிணிகள் கொரோனா தடுப்பூசி போட்டாச்சு

தமிழகத்தில் ஏறத்தாழ 1 லட்சத்திற்கு மேற்பட்ட கர்ப்பிணிகள் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. 

 
தமிழகத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முறை சமீபத்தில் தொடங்கிய நிலையில் தற்போது தமிழகத்தில் ஏறத்தாழ 1 லட்சத்திற்கு மேற்பட்ட கர்ப்பிணிகள் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டுள்ளனர். 
 
 தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட கர்ப்பிணி பெண்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது. முதல் டோஸை 10,7,527 கர்ப்பிணி பெண்களும் இரண்டு டோஸ்களையும் 346 கர்ப்பிணிகளும் போட்டுகொண்டுள்ளனர். இதுவரை 1,07,838 கர்ப்பிணிகள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர்.