செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 23 பிப்ரவரி 2021 (10:51 IST)

மைக் மோகனின் புதிய கெட்டப்... இணையத்தில் வெளியான புகைப்படம்!

ஒரு காலத்தில் வெள்ளி விழாப் படங்களின் நாயகனாக இருந்த நடிகர் மைக் மோகன் இப்போது அடுத்த ரவுண்ட்டுக்கு தயாராகி வருகிறார்.

1980களில் ரஜினி கமல் ஆகியோர் உச்சத்தில் இருந்தபோதே வெள்ளி விழாப் படங்களை கொடுத்தவர் நடிகர் மைக் மோகன். இவர் நடித்த பயணங்கள் முடிவதில்லை, இதயகோயில், நான் பாடும் பாடல், உதய கீதம், மூடுபனி, நெஞ்சத்தை கிள்ளாதே உள்பட பல திரைப்படங்கள் 200 நாட்களையும் தாண்டி திரையரங்குகளில் வெற்றி நடை போட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய படங்களின் வெற்றிக்கு இளையராஜா ஒரு முக்கிய முக்கிய என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் ஒரு கட்டத்தில் அவரது படங்களுக்கு வரவேற்புக் குறைய ஆரம்பித்த நிலையில் அவருக்கான வாய்ப்புகள் குறைந்தன. ஒரு கட்டத்தில் அவர் படங்களில் நடிப்பதையே நிறுத்தினார். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அவர் நடித்த கடைசி திரைப்படம் சுட்டப்பழம். ஆனால் இப்போது மீண்டும் ஒரு குறைந்த பட்ஜெட் படத்தில் அவர் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அதற்காக அவர் நீண்ட தாடி வளர்த்து வருகிறார். இப்போது அந்த கெட்டப்போடு இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.