தேனாண்டாள் முரளியிடம் விஜய் பரிந்துரைத்த இயக்குனர்… ஷாக்கான தயாரிப்பாளர்!

Last Modified செவ்வாய், 23 பிப்ரவரி 2021 (10:16 IST)

விஜய் நடித்த மெர்சல் திரைப்படத்தின் தயாரிப்பாளர் தேனாண்டாள் முரளிக்கு மீண்டும் கால்ஷீட் கொடுத்துள்ளார் விஜய்.

விஜய் மூன்று வேடங்களில் நடித்து அவருக்கு மூன்று கதாநாயகிகள் ஜோடியாக நடிக்க வைக்கப்பட்டு பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட திரைப்படம் மெர்சல். இந்த படத்தை விஜய்யின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவரான அட்லி இயக்கியிருந்தார். சொன்ன பட்ஜெட்டை விட அதிகமாக செல்வு செய்ததால் இந்த படத்துக்கு நல்ல வசூல் இருந்தும் தயாரிப்பாளர் கடனில் சிக்கிக் கொண்டார். இதனால் படத்தில் பணியாற்றிய மேஜிக் கலைஞருக்குக் கூட சம்பளம் கொடுக்காமல் அது பெரிய சர்ச்சையானது.

இதனால் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தேனாண்டாள் முரளியில் படத் தயாரிப்பில் ஈடுபட முடியவில்லை. இப்போது அவர் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நிலையில் அவருக்கு மீண்டும் கால்ஷீட் கொடுத்துள்ளார் விஜய். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடித்து முடித்த பிறகு அவர் தேனாண்டாள் நிறுவனத்தின் படத்தில் நடிக்க உள்ளார் என்று சொல்லப்பட்டு வந்தது.

ஆனால் அந்த தயாரிப்பாளரிடம் விஜய் மெர்சல் படத்தின் இயக்குனர் அட்லியே இந்த படத்தையும் இயக்கட்டும் என சொல்லி பரிந்துரைத்தாராம். ஆனால் மெர்சல் படத்தில் அவரிடம் பட்ட பாடங்களை மனதில் வைத்து தயாரிப்பாளர் அட்லி வேண்டாம் என சொல்லிவிட்டதாக சொல்லப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :