1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 16 ஏப்ரல் 2018 (17:54 IST)

இணையத்தில் வெளியான மெர்குரி: வருத்தத்தில் படக்குழு..

இணையதளத்தில் திருட்டுதனமாக வெளியிடப்படும் படங்கள் தமிழ் திரைத்துறையினருக்கு தலைவலியாக உள்ளது. இதற்கு ஒரு முடிவு எடுக்க முடியாமல் அனைவரும் திணறி வருகின்றனர். 
 
படங்கள் திரைக்கு வந்த சில மணிநேரத்திலேயே இணையதளங்களிலும் வெளிவந்து விடுகின்றன. இதனால், தியேட்டர்களில் வசூல் குறைந்து தயாரிப்பாளர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
 
இந்நிலையில் பிரபுதேவா கதாநாயகனாக நடித்துள்ள மெர்குரி படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. ஆனால், இந்த படம் தமிழகத்தில் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். மெர்குரி படத்தை வசனம் இல்லாத திகில் படமாக உருவாக்கி இருந்தார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் நடத்தி வரும் போராட்டம் முடிந்த பிறகு தமிழகத்தில் திரையிடுவதற்காக மெர்குரி படத்தை நிறுத்தி வைத்து இருந்தனர். 
 
ஆனால் படம் மற்ற மாநிலங்களில் வெளியானது. தற்போது தமிழகத்தில் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியானதால் படக்குழுவினருக்கு அதிர்ச்சியில் உள்ளது.