திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Modified: திங்கள், 16 ஏப்ரல் 2018 (11:38 IST)

ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த பிரபுதேவா

பைரசியில் படம் பார்க்காதீர்கள் என ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் பிரபுதேவா.
 
 
பிரபுதேவா நடிப்பில் கடந்த வாரம் ரிலீஸான படம் ‘மெர்க்குரி’. கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இந்தப் படம், சைலண்ட் திரில்லராக உருவாகியுள்ளது. தயாரிப்பாளர்கள் சங்கப் போராட்டத்தால் தமிழில் ரிலீஸாகாத இந்தப் படம், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ரிலீஸாகியுள்ளது.
 
இந்நிலையில், சினிமா ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார் பிரபுதேவா. “மெர்க்குரி படத்தின் சஸ்பென்ஸ் என்ன என்பதை திரையில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். தயவுசெய்து பைரசியில் படம் பார்க்காதீர்கள். இது எங்களுடைய தாழ்மையான வேண்டுகோள்” எனத் தெரிவித்துள்ளார் பிரபுதேவா.