டேட்டிங் இணையதளத்தால் இளம்பெண்ணிடம் 60 லட்சம் ரூபாயை ஏமாந்த தொழிலதிபர்
பெங்களூரை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், டேட்டிங் இணையதளத்தால் 60 லட்சம் ரூபாயை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், 'டேட்டிங்' இணையதளம் ஒன்றில், கடந்தாண்டு, ஜூலையில், தன் பெயரை பதிவு செய்தார். ஷோம்பா 76 என்ற ஐ.டி யில் பெண் ஒருவர் தொழிலதிபருக்கு அறிமுகமானார். பின் இருவரும் தங்களின் மொபைல் எண் மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து கொண்டனர்.
அந்த பெண் தனது பெயர் அர்பிதா என்றும், மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவை சேர்ந்தவள் என்றும் கூறியிருக்கிறார். ஒரு கட்டத்தில் அந்த பெண்மணி தனது தந்தைக்கு உடல் நிலை சரியில்லை எனவும், அவரது மருத்துவ செலவுக்கு 30 ஆயிரம் ரூபாய் தேவைப்படுவதாகவும் தொழிலதிபரிடம் கூறியுள்ளார். இதனை நம்பிய அவர், அப்பெண்ணின் வங்கிக் கணக்கில் 30 ஆயிரம் ரூபாய் செலுத்தியுள்ளார். அதேபோல் பலமுறை பணம் பெற்ற அர்பிதா, 60 லட்சம் வரை சுருட்டியுள்ளார். ஒருகட்டத்தில் தொழிலதிருடனான தொடர்பை துண்டித்துள்ளார் அர்பிதா.
இதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தொழிலதிபர், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார், போலீஸார் இதுகுறித்து விசாரனை நடத்தி வருகின்றனர்.