திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 28 மே 2021 (16:52 IST)

திருமணத்தை தள்ளி வைத்த தனுஷ் பட நடிகை!

நடிகை மெஹ்ரின் தனது திருமணத்தை அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைப்பதாக அறிவித்துள்ளார்

நடிகர் தனுஷ் நடித்திருந்த பட்டாஸ் படம் கடந்த பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகியிருந்தது. இப்படத்தில் ஸ்னேகா மற்றும் மெஹ்ரின் பிர்சடா என இரண்டு ஹீரோயின்கள் நடித்திருந்தனர். மெஹ்ரின் அதற்கு முன்னதாகவே நெஞ்சில் துணிவிருந்தால்  மற்றும் நோட்டா ஆகிய படங்களிலும் நடித்திருந்தார்.

இவர் ஹர்யானா காங்கிரஸின் முன்னாள் முதல்வர் பஜன் லாலின் பேரன் பவ்யா பிஷ்னோ என்பவரை காதலித்து வந்தார். இவர்களின் திருமண நிச்சயதார்த்தமும் மார்ச் மாதம் நடந்திருந்தது. ஆனால் தற்போதுள்ள சூழ்நிலையில் திருமணம் நடப்பது சாத்தியமில்லை என்பதால் 2022 ஆம் ஆண்டு தனது திருமணத்தை தள்ளி வைக்கப்போவதாக மெஹ்ரின் அறிவித்துள்ளார்.