செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 10 ஆகஸ்ட் 2020 (16:10 IST)

பப்ளிசிட்டி தேடிய மீரா மிதுனுக்கு நேர்ந்தது என்ன! – இன்ஸ்டாகிராமில் பாலோயர்கள் எண்ணிக்கை….?

பப்ளிசிட்டிக்காக தொடர்ந்து விஜய் மற்றும் சூர்யா ஆகியோரைத் தாக்கி வரும் நடிகை மீரா மிதுனின் இன்ஸ்டாகிராம் பாலோயர்ஸ்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

மீரா மிதுன் விஜய் மற்றும் சூர்யா இருவரையும் மோசமாக விமர்சித்தது சமூகவலைதளத்தில் கொதிநிலையை உருவாக்கியுள்ளது. இதனால் கோபமான அவ்விரு நடிகர்களின் ரசிகர்கள் மீராவை ஆபாச அர்ச்சனையில் மூழ்க வைத்துள்ளனர். அதில் ஒரு சிலர் ஆபாசமாக மீராவை திட்ட இப்போது மீரா பதிலுக்கு சூர்யா மற்றும் விஜய் ரசிகர்களுக்கு எதிராக ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் இனிமேல் என்னை ஆபாசமாக பேசினால் ‘நானும் பதிலுக்கு ஜோதிகா மற்றும் சங்கீதாவை ஆபாசமான வார்த்தைகளால் திட்டுவேன் (சில ஆபாசமான வார்த்தைகளை சொல்கிறார்). மேலும் என்னைத் திட்டுவதை விட்டு நான் சாதித்த அளவுக்கு நீங்களும் சாதியுங்கள்’ எனக் கூறியுள்ளார். இந்த வீடியோவானது ரசிகர்களை மேலும் கோபப்படுத்தியுள்ளது.

இதையடுத்து விஜய் மற்றும் சூர்யா ரசிகர்கள் மீரா மிதுனுக்கு எதிராக சமூகவலைதளங்களில் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். அதிலும் ஒரு சிலர் எல்லை மீறி மீராவை ஆபாசமாக விமர்சனம் செய்வது பிரச்சனையை திசை திருப்பும் விதமாக அமைந்துள்ளது. இருபுறமும் நடக்கும் ஆபாச அர்ச்சனைகளை பொறுத்துக் கொள்ள முடியாமல் பாரதிராஜா போன்ற மூத்த கலைஞர்களே அறிக்கை விட்டு தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் பப்ளிசிட்டிக்காகதான் இப்படி மீரா மிதுன் செய்வதாக ஒரு குற்றச்சாட்டு வைக்கப்பட்ட நிலையில் அதற்கு நேர்மாறாகவே நடந்துள்ளது. இந்த பிரச்சனைக்கு முன்னர் இன்ஸ்டாகிராமில் 10 லட்சம் பேர் பாலோயர்களாக அவருக்கு இருந்தனர். ஆனால் இப்போது அது 3 லட்சமாகக் குறைந்துள்ளது.