1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 12 நவம்பர் 2020 (18:42 IST)

6 ஸ்க்ரீன்லயும் போட தயார்: ‘மாஸ்டர்’ டீசர் குறித்து திரையரங்க உரிமையாளர் டுவீட்!

தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் டீசர் தீபாவளி அன்று மாலை ஆறு மணிக்கு வெளியாகும் என சற்று முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்த அதிகாரபூர்வ அறிவிப்பை அடுத்து விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் கொண்டாடி வருகின்றனர். ‘மாஸ்டர்’ டீசர் குறித்த ஹேஷ்டேக் டுவிட்டரில் இந்திய அளவில் டிரெண்ட் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ‘மாஸ்டர்’ டீசர் குறித்து சென்னை ரோகிணி தியேட்டர் உரிமையாளர் ஒரு டுவிட்டை பதிவு செய்துள்ளார். அதில் ‘வாத்தியாரு... தளபதி.. இதைவிட செலிபிரேஷன் எங்கே இருக்கின்றது? தீபாவளிக்கு கொளுத்துங்கடா மாஸ்டர் டீசர் என்று குறிப்பிட்டு உள்ளார் 
 
இந்த டுவிட்டுக்கு கமெண்ட் பதிவு செய்த விஜய் ரசிகர் ஒருவர் ‘மாஸ்டர்’ டீஸரை உங்கள் தியேட்டரில் போடுவீர்களா என்று கேட்டதற்கு தியேட்டரில் போட அனுமதித்தால் ஆறு ஸ்க்ரீன்லயும் போட தயார் என்று கூறியுள்ளார். இதனை அடுத்து ‘மாஸ்டர்’ படக்குழுவினர் திரையரங்குகளுக்கு டீசரை கொடுப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
ஏற்கனவே திரையரங்குகளுக்கு கூட்டம் வருவதற்கு பொதுமக்கள் தயங்கி வரும் நிலையில் ‘மாஸ்டர்’ டீசரை திரையரங்கில் வெளியிட்டால் மிகப்பெரிய அளவில் திரையரங்கிற்கு கூட்டம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது