வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 11 நவம்பர் 2020 (20:45 IST)

விஜய் மக்கள் இயக்கத்தில்.... புதிய நிர்வாகிகளை நியமித்தார் நடிகர் விஜய்.

சமீபத்தில் நடிகர்  விஜய்க்கும் அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகருகும் இடையே அரசியல் கட்சி தொடங்குவது தொடர்பாக கருத்துவேறுபாடு நிலவிவந்தது.,எனவே இது பொதுவெளிக்கு வந்ததால்  அனைத்து மீடியாக்களின் கவனம் பெற்றது.

விஜய்க்கு அரசியலில் ஈடுபாடில்லை என்றாலும் எஸ்.ஏ.சி  அதிக ஈடுபாட்டுடன் உள்ளதாகவும் தன்னைக் கேட்காமல் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்திற்கு கையெழுத்து வாங்கி அதில் தன்னைப் பொறுப்பாளராக நியமித்துள்ளதாகவும் அதில் தனக்கு விருப்பமில்லாமல் விலகியுள்ளதாகவும்  விஜய்யின் அம்மா ஷோபா தெரிவித்தார்.

இந்நிலையில் விஜய் தற்போது  தனது விஜய் மக்கள் இயக்கத்திற்கு புதிய நிர்வாகிகளாக மாவட்ட தலைவர்கள், இளைஞரணி தலைவர்களை நியமித்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

எஸ்.ஏ.சி , தன் மகன் விஜய் விஷ வளையில் சிக்கியுள்ளாதக் குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.