வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (17:29 IST)

''வலிமை ''பட வில்லன் நடிகரின் மாஸ் புகைப்படம் வைரல்

வலிமை படம் இன்னும்  5 நாட்களில் வெளியாகவுள்ள நிலையில்  இப்படத்தின்  நடித்துள்ள வில்லன் நடிகரின் புகைப்படம் வைரலாகிவருகிறது.

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படம் வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி வெளியாக உள்ளது.

கடைசியாக அஜித்தின் நேர்கொண்ட பார்வை வெளியாகி இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு இந்த படம் வெளியாகிறது. அஜித் என்னை அறிந்தால் படத்துக்குப் பிறகு போலிஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.  மிகப்பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தின் ஆக்சன் காட்சிகளை புரொமோவாக போனிகபூர் ரிலீஸ் செய்து வருகிறார். இன்று, பைக் சேசிங்  மற்றும் ஸ்டண்ட் காட்சிகளை அவர் வெளியிட்டுள்ளார். இது  வைரலானது. இன்று வலிமை படத்தின்  #ValimaiPreReleaseEvent  நடக்கவுள்ளதால் ரசிகர்கள்  மிகுந்த ஆர்வமுடன் உள்ளனர்.

இந்நிலையில், வலிமை படத்தில் வில்லனாக நடித்துள்ள கார்த்திகேயாவின் புதிய புகைப்படம் இன்று சமூகவலைதளத்தில் வைரலாகிவருகிறது.

இதில், இன்று மாலை 6 மணிக்கு கர்நாடகாவில் வலிமை  #ValimaiPreReleaseEvent நடைபெறவுள்ளாதாக இதை தான் மிகவும் எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.