1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (23:58 IST)

''வலிமை'' படத்திற்கு நள்ளிரவு காட்சிக்கு அனுமதி !

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்தின் தியேட்டர் ஷோ டைம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

எச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள படம் வலிமை. இந்த படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். இந்த படம்  கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக  வரும்  பிப்ரவரி 24 அன்று வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

உலகம்முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள வலிமை படம் தமிழில் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாக உள்ளது.

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள முதல் பான் இந்தியா படம் வலிமை என தயாரிப்பாளர் போனிகபூர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வலிமை படம் தியேட்டர்களின் எந்த நேரத்தில் ஒளிபரப்பாகும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து டிராக்கர் அசோசியேசன்ஸ் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளதாவது:  24 ஆம் தேதி அதிகாலை 1 மணி, அதிகாலை  4 மணி, காலை 7 மணிக்கு மதியம் 1 மணிக்கு,  மாலை 4 மணிக்கு இரவு 7 மணிக்கும் இரவு 10 மணி என தெரிவித்துள்ளது.

நள்ளிரவு காட்சி இதன் மூலம் உறுதியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.