திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 12 டிசம்பர் 2020 (19:31 IST)

’’வனிதா விஜயகுமார், பீட்டர்பால் திருமண விவகாரம்’’... நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சமீபத்தில் நடிகை வனிதா இயக்குநர் பீட்டர் பாலை  3வதாக திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்பட்ட நிலையில் பீட்டர் பாலின் முதல் மனைவி இதுகுறித்து வழக்குத் தொடர்ந்தார்.

வனிதா விஜயகுமார் மற்றும் பீட்டர் பாலின் திருமணம் சமூக வலைதளங்களில் பெரும் விவாரத்தை ஏற்படுத்தியது.

ஆனால் குறுகிய காலத்திலேயே இருவரும் பிரிந்துவிட்டதாகவும் தகவல் வெளியானது. இதை வனிதா தனது யுடியூப் சேனல் பக்கத்தில் தெரிவித்தார்.

இந்நிலையில் பீட்டர் பாலின் முதல் மனைவி தொடர்ந்த வழக்கில் , பீட்டர் பால், வனிதா திருமணம் தொடர்பாக இருவரும் நேரில் ஆஜராக வேண்டுமென சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

இதன்படி வரும் 23 ஆம் தேதி வனிதா மற்றும் பீட்டர் பால் இருவரும் வரும்  23 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராவார்கள் எனத் தெரிகிறது.