வியாழன், 10 அக்டோபர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வியாழன், 10 அக்டோபர் 2024 (11:16 IST)

இஸ்ரேல் - ஈரான் போரால் வீழ்ந்த பங்குச்சந்தை மீண்டும் உயர்வு.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!

share
இஸ்ரேல் மற்றும் ஈரான் போர் காரணமாக இந்திய பங்குச் சந்தை மோசமாக சரிந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பங்குச்சந்தை மீண்டும் வருகிறது என்பதை பார்த்து வந்தோம். இந்த நிலையில் இன்றும் பங்குச்சந்தை உயர்ந்து வருவதை அடுத்து கிட்டத்தட்ட இயல்பு நிலைக்கு பங்குச்சந்தை திரும்பிவிட்டதாக கருதப்படுகிறது.

மும்பை பங்குச் சந்தை இன்று 200 புள்ளிகள் அதிகரித்து 81 ஆயிரத்து 24 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதேபோல் தேசிய பங்குச் சந்தை நிப்டி 50 புள்ளிகள் அதிகரித்து 2530 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது.

பங்குச்சந்தை மீண்டும் உயர்ந்து வருவதை அடுத்து முதலீட்டாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இன்றைய பங்குச்சந்தையில் ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், எச்.சி. எல். டெக்னாலஜி, எச்டிஎஃப்சி வங்கி உள்ளிட்ட பங்குகள் உயர்ந்ததாகவும், இன்போசிஸ், ஐசிஐசிஐ வங்கி, ஹிந்துஸ்தான் லீவர், பாரதி ஏர்டெல், ஆசியன் பெயிண்ட் உள்ளிட்ட பங்குகள் சரிந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Edited by Siva