வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 14 ஜூலை 2018 (13:38 IST)

திகிலூட்டும் காட்சிகளுடன் தயாரகும் கடமான்பாறை

தனது ராஜ்கென்னடி பிலிம்ஸ் பட நிறுவனத்திற்ககா மன்சூர் அலிகான் எழுதி இயக்கி, தயாரிக்கும் படத்திற்கு கடமான்பாறை. இப்படத்தில் கதாநாயகனாக மன்சூர்ரலிகானின் மகன் அலிகான் துக்ளக் அறிமுகமாகிறார். மன்சூரலிகானும் ஒரு  முக்கிய வேடத்தில் நடிக்கிறார். 



கதாநாயகியாக அனுராகவி,ஜெனி பெர்ணாண்டஸ் ஆகியோர் நடிக்கின்றனர். மற்றும் சிவசங்கர், சார்மி, தேவி தேஜு, பிளாக் பாண்டி, அமுதவாணன், முல்லை, கோதண்டம், பழனி, கனல்கண்ணன், போண்டாமணி, பயில்வான் ரங்கநாதன், லொள்ளுசபா மனோகர், வெங்கல்ராவ், ஆதி சிவன், விசித்திரன், கூல்சுரேஷ்ஆகியோர்  நடிக்கிறார்கள்.

படம் பற்றி இயக்குனர் மன்சூரலிகான் கூறுகையில், கலூரியில் படிக்கும் இளைஞர்கள் இப்போது வழிமாறி போகிறார்கள். அப்பா அம்மா, ஆசிரியர் என யார் சொன்னாலும் எதையும் அவர்கள் பொருட்படுத்துவது கிடையாது. அப்படி இருக்கும் ஒரு காதல் ஜோடி கல்லூரியை கட்டடித்துவிட்டு. ஒரு மலைப்பகுதிக்கு செல்கிறார்கள். 

அந்த கங்குவாரெட்டி மலை, கஞ்சமலையை   தன் வசம் வைத்திருக்கும் ஆதிவாசி சூரப்பன் மன்சூரலிகானிடம் மாட்டிக்கொள்கிறார்கள். அவனிடம் பாரஸ்ட் ரேஞ்சர் கூட மாட்டிக்கொண்டால் உயிரோடு திரும்ப முடியாது அந்த மலையில் இருந்து செம்மரக்கட்டை கடத்த முடியாது, கனிமவளங்களை திருட முடியாது, காட்டிலிருந்து எந்த பொருளும் வெளியே விடாமல் அந்த காட்டின் பாதுகாவலனாக இருக்கும் அவனிடம் சிக்கிய ஜோடி தப்பிதார்களா இல்லையா என்பதுதான் இந்த கடமான்பாறை படத்தின் திரைக்கதை. திகிலூட்டும் காட்சிகள் மக்களை ரசிக்கவைக்கும் என்றார்.