செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 30 டிசம்பர் 2022 (18:39 IST)

துணிவு’ படத்தின் மஞ்சுவாரியர் கேரக்டர் அறிவிப்பு!

Manju
அஜித் நடித்த துணிவு திரைப்படத்தின் கேரக்டர் அறிமுகம் இன்று காலை முதல் வெளியாகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் சற்று முன் துணிவு படத்தில் நடித்த மஞ்சு வாரியாரின் கேரக்டர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது அவர் இந்த படத்தில் கண்மணி என்ற கேரக்டரில் நடித்து இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
ஏற்கனவே இந்த படத்தில் நடித்த பகவதி பெருமாள், மோகனசுந்தரம், அஜய், ஜான் கொகைன், சமுத்திரக்கனி, ஜிஎம் குமார், வீரா ஆகியோர்களின் கேரக்டர் குறித்த அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது மஞ்சுவாரியர் கேரக்டரும் அறிமுகம் செய்யப்பட்டுள்ள்து என்பது குறிப்பிடத்தக்கது
 
இதனை அடுத்து இன்னும் சில நிமிடங்களில் அஜீத்தின் கேரக்டர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எச் வினோத் இயக்கத்தில் உருவாகிய இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார் என்பதும், இந்த படத்தை பிரமாண்டமாக போனிகபூர் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited  by Mahendran