புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 2 செப்டம்பர் 2020 (17:50 IST)

கார்த்திக்கு முட்டுக் கட்டை போடும் மணிரத்னம் – பொன்னியின் செல்வன் அப்டேட்!

கார்த்தி நடிக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் பட்ப்பிடிப்பு விரைவில் தொடங்கும் எனத் தெரிகிறது.

படப்பிடிப்புகளுக்கு தமிழக அரசு அனுமதித்துள்ள நிலையில் வரிசையாக படப்பிடிப்புகள் தொடங்க உள்ள நிலையில் கார்த்தியும் சுல்தான் திரைப்படமும் தொடங்கப்பட இருந்தது. ஆனால் மணிரத்னம் அதற்கு முட்டுக்கட்டை போட்டு முதலில் பொன்னியின் செல்வனை முடித்துவிட்டு செல்ல வேண்டும் எனக் கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் மணிரத்னம் ஒரு குழுவை அனுப்பி சிலோனில் படப்பிடிப்பு தளங்களை தேர்வு செய்ய அனுப்பியுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. மேலும் கலை இயக்குனர் தோட்டாதரணி கைவண்ணத்தில் சென்னையில் சில ஸ்டுடியோக்களில் செட் அமைக்கும் பணிகளும் நடந்து வருகிறது.