வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 1 செப்டம்பர் 2020 (12:53 IST)

5 வருஷமாகியும் ரிலீஸ் ஆகலை, மீண்டும் அதே ஹீரோவுடன் இணையும் லட்சுமிமேனன்

மீண்டும் அதே ஹீரோவுடன் இணையும் லட்சுமிமேனன்
இளம் ஹீரோவுடன் லட்சுமி மேனன் நடித்த திரைப்படம் 5 ஆண்டுகளாக வெளிவராமல் இருக்கும் நிலையில் மீண்டும் அதே இளம் ஹீரோவுடன் நடிக்க லட்சுமி மேனன் ஒப்பந்தமாகி உள்ளார்
 
நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக்குடன் லட்சுமி மேனன் நடித்த திரைப்படம் ’சிப்பாய்’. இந்த திரைப்படம் கடந்த 2015ஆம் ஆண்டே ரிலீசுக்கு தயாராகிவிட்டது. ஆனால் ஒரு சில பிரச்சனைகள் காரணமாக இந்த படம் ரிலீசாகவில்லை 
 
இந்த நிலையில் இயக்குனர் முத்தையா இயக்கவுள்ள அடுத்த படத்தில் கவுதம் கார்த்திக் ஹீரோவாக நடிக்க உள்ளார். ஏற்கனவே இருவரும் ’தேவராட்டம்’ என்ற படத்தில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தின் நாயகியாக லட்சுமி மேனன் நடிக்க உள்ளார்.
 
கடந்த 3 ஆண்டுகளாக கல்லூரி படிப்பு காரணமாக திரையுலகுக்கு விடுமுறை எடுத்து இருந்த லட்சுமி மேனன் மீண்டும் தற்போது இந்த படத்தின் மூலம் ரீ-என்ட்ரி ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. முத்தையா இயக்கிய ’குட்டிப்புலி’ மற்றும் ‘கொம்பன்’ ஆகிய திரைப்படங்களில் லட்சுமி மேனன் தான் நாயகி என்பது குறிப்பிடத்தக்கது
 
தற்போது லட்சுமி மேனன் உடல் ஸ்லிம்மாகி உள்ள புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில் இந்த படத்தில் இருந்து அவருக்கு பெரிய மார்க்கெட் கோலிவுட்டில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது