1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 1 செப்டம்பர் 2020 (08:08 IST)

ஜகமே தந்திரம் ஒடிடி ரிலிஸ் பின்வாங்கல் – தனுஷின் முடிவுக்கு என்ன காரணம்!

சூரரைப் போற்று திரைப்படம் போல ஜகமே தந்திரம் திரைப்படமும் ஓடிடியில் ரிலிஸ் ஆகலாம் என சொல்லப்பட்ட நிலையில் அதை தயாரிப்பு தரப்பு மறுத்துள்ளது.

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில ஜகமே தந்திரம் படம் தயாராகி ரிலிஸுக்கு காத்திருக்கிறது. வொய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தினை தயாரிக்கின்றனர். தனுஷிற்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி இப்படத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் இந்த படத்தையும் எப்படியாவது வாங்கிவிட வேண்டுமென்று அமேசான் ப்ரைம் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் தனுஷ் தயாரிப்பாளரிடம் ’படத்தை திரையரங்கம் திறந்தவுடன் ரிலீஸ் செய்துகொள்ளலாம். அதனால் உங்களுக்கு ஏதேனும் நஷ்டம் ஏற்பட்டால் இன்னொரு படத்தில் நடித்துத் தருகிறேன்’ என வாக்குறுதி கொடுத்துள்ளாராம்.

ஏனென்றால் சூரரைப் போற்று படத்தை ஓடிடியில் ரிலிஸ் செய்வதால் சூர்யா கடுமையான விமர்சனங்களை பெற்று வருவதால் தனது அடுத்தடுத்த படங்கள் பாதிக்குமோ என்ற அச்சத்தில் இந்த முடிவை தனுஷ் எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.