1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: திங்கள், 11 செப்டம்பர் 2023 (16:10 IST)

சர்வதேச புகழ் பெற்ற ரஜினிகாந்தை சந்தித்தேன்: மலேசிய பிரதமர் டுவிட்..!

சர்வதேச அளவில் கலை உலகில் புகழ்பெற்ற ரஜினிகாந்தை சந்தித்தேன் என மலேசிய பிரதமர் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். 
 
 நடிகர் ரஜினிகாந்த் கடந்த சில நாட்களாக பிரபலங்களை சந்தித்துக் கொண்டு வருகிறார் என்பதும் குறிப்பாக உத்தரப்பிரதேசம் மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களை சந்தித்தது பரபரப்பு ஏற்படுத்தியது என்பது தெரிந்தது 
 
இந்த நிலையில் மலேசிய பிரதமர்  அன்வர் இப்ராஹிம் அவர்களை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்துள்ளார். மலேசியாவில் நடந்த இந்த சந்திப்பு குறித்து நம் நாட்டு பிரதமர் தனது சமூக வலைதளத்தில் கூறிய போது ஆசிய மற்றும் சர்வதேச கலை உலகில் புகழ்பெற்ற ரஜினிகாந்தை சந்தித்தேன் என்று குறிப்பிட்டுள்ளார். 
 
இந்த பதிவை தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.  மேலும் ரஜினியை சந்தித்தது குறித்த புகைப்படங்களையும் அவர் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
 
Edited by Siva