1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: திங்கள், 11 செப்டம்பர் 2023 (11:11 IST)

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘தலைவர் 171’: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ‘தலைவர் 171’ திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சற்றுமுன் அறிவித்துள்ளது. 
 
நேற்று மாலை முதல் சமூக வலைதளங்களில் ரஜினி மற்றும் லோகேஷ் கனகராஜ் இணையும் படம் டிராப் ஆகிவிட்டதாக வதந்திகள் பரவிய நிலையில் அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நிலையில் இந்த இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் தலைவர் 171’ படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். அனிருத் இசையமைக்கும் இந்த படத்திற்கு அன்பறிவ் ஸ்டண்ட் இயக்குனராக பணிபுரிய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அதிகாரபூர்வ அறிவிப்பால் ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
 
Edited by Siva