திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: புதன், 11 செப்டம்பர் 2024 (13:37 IST)

பிரபல பாலிவுட் நடிகை மலைகா அரோராவின் தந்தை அனில் அரோரா தற்கொலை

பிரபல பாலிவுட் நடிகை மலைகா அரோராவின் தந்தை அனில் அரோரா தற்கொலை செய்து கொண்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
 
பிரபல பாலிவுட் நடிகை மலைகா அரோராவின் தந்தை அனில் அரோரா மும்பையில் தான் வசிக்கும் குடியிருப்பு கட்டடத்தின் 6வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
 
தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருவதாகவும், தற்கொலைக்கு முன் அவர் கடிதம் எதுவும் எழுதி வைத்துள்ளாரா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது
 
மணிரத்னம் இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ’உயிரே’ படத்தில் இடம்பெற்ற "தைய்யா தைய்யா" பாடல் மூலம் பிரபலமடைந்தவர் மலைகா அரோரா. மேலும் தொலைக்காட்சியில் நடனம் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் புகழ்பெற்றவர் நடிகை மலைகா அரோரா என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran