1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 25 ஆகஸ்ட் 2018 (20:41 IST)

மகத் வெளியேற்றம்: யாசிகா, ஐஸ்வர்யாவுக்கு இனி திண்டாட்டம்

பிக்பாஸ் வீட்டில் இருந்து இன்று மகத் வெளியேறிவிட்டதாக இந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பை நேரில் பார்த்தவர்கள் டுவீட் செய்துள்ளனர். இதனை மகத்தின் நெருங்கிய நண்பர் ஒருவரும் உறுதி செய்துள்ளதால் மகத் வெளியேற்றம் நிச்சயம் என்றே தோன்றுகிறது. 
 
இன்று வெளியேறிய மகத், தன் மீது மக்கள் ஏன் இவ்வளவு வெறுப்பு கொண்டிருக்கின்றனர் என்பதை உணர்ந்து கொண்டால் அவருக்கு நல்ல எதிர்காலம். அதில்லாமல் தான் செய்தது தான் நியாயம், மக்கள் தன்னை புரிந்து கொள்ளவில்லை என்ற ரீதியில் பேசினால் அது அவரது தலையெழுத்து.
 
கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக மகத்தை பகடைக்காயாக பயன்படுத்தி தங்களை காப்பாற்றி கொண்டிருந்த ஐஸ்வர்யா மற்றும் யாஷிகாவுக்கு இனி திண்டாட்டம். அடுத்த அடிமை யார்? என்பது குறித்து இனி இருவரும் ஆலோசிக்கக்கூடும். அனேகமாக செண்ட்ராயன் சிக்க வாய்ப்பு உள்ளது
 
இந்த வார தலைவரான மகத் வெளியேறிவிட்டதால் செண்ட்ராயன் இந்த வார தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. மகத்தை வெளியேற்றிய மக்கள் ஐஸ்வர்யாவையும், யாஷிகாவையும் வெளியேற்ற தயாராகி வருகின்றனர். இவர்கள் இருவரும் வெளியேறினால்தான் பிக்பாஸ் நிகழ்ச்சி களைகட்டும் என தெரிகிறது.