வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சின்னத்திரை
  3. தொலைக்காட்சி
Written By VM
Last Updated : வெள்ளி, 24 ஆகஸ்ட் 2018 (13:04 IST)

பிக்பாஸ் வீட்டின் உள்ளே வந்ததும் ஆரம்பித்த விஜயலட்சுமி!

பிக் பாஸ் நிகழ்ச்சி ஒவ்வொரு நாளும் பரபரப்பை அதிகரித்துக் கொண்டே வருகிறது. நிகழ்ச்சியில் கொடுக்கப்படும் போட்டிகளும் சுவாரஸ்யத்தை  ஏற்படுத்துகிறது.
வைல்ட்கார்ட் எண்ட்ரியாக வீட்டிற்குள் வந்திருப்பவர் நடிகை விஜயலட்சுமி. இவருக்கு என்ன பிளஸ் என்றால், பிக்பாஸ் வீட்டுக்கு உள்ளே இருப்பவர்களின் பிளஸ் மற்றும் மைனஸ் தெரிந்திருக்கும். அதனால் எப்படி அங்கு செயல்படலாம் என்பதை அறிந்துள்ளார்.
 
இன்று காலை வந்த புதிய புரொமோவில் டேனியலிடம், பிக்பாஸ் விட்டிற்குள் ஜெயிக்க தான் வந்தீர்கள், பிறகு ஏன் வீட்டை விட்டு வெளியே போகிறேன் என்று  கூறுகிறீர்கள் என்று பேசுகிறார். நிகழ்ச்சிக்குள் போனதுமே மற்றவர்களுக்கு அறிவுரை கூற ஆரம்பித்திருக்கிறார்.