பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய மஹத் செயலால் அதிர்ச்சியான ரசிகர்கள்
பிக்பாஸ் வீட்டை விட்டு மஹத் வெளியேறியது, பலருக்கும் மனக்கஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் வெளியேற முக்கிய காரணம் ஐஸ்வர்யா, மற்றும் யாஷிகா. இவர்களது செய்கைகள் குறித்து ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
பிக் பாஸ் வீட்டில் அவர் முரட்டுத் தனமாக, கோபமாக நடந்து கொண்டதால் மக்களிடையே பெரும் வெறுப்புணர்வைச் சம்பாதித்துள்ளார். யாஷிகாவுடன் அவருக்கு ஏற்பட்ட காதலால், அவருக்காக வெளியில் காத்திருந்த காதலையும் அவர் இழந்துள்ளார்.
மஹத் வீட்டிற்குள் போகும்போதே தனக்கு காதலி இருக்கிறாள் என்று மக்களுக்கு தெரிவித்துவிட்டு தான் சென்றார். திடீரென்று அவர் வீட்டிற்குள் யாஷிகா மீது காதல் என்று சொன்னதும் அவருடைய காதலி பிராச்சி, மிகவும் மனவேதனையுடன் மஹத்தை பிரிந்துவிட்டதாக ஒரு பதிவு போட்டார், பின் அதை நீக்கினார்.
பிக்பாஸ் போட்டியாளர்கள் சிலரும், மஹத் உண்மையில் நல்லவர் தான், சில விஷமிகளின் தூண்டுததால் இப்படி நடந்துக்கொண்டார் என்றே தங்களுடைய கருத்தை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது வீட்டைவிட்டு வெளியேறிய மஹத் பிக்பாஸில் போட்ட குறும்படத்தை இன்ஸ்டகிராமில் பதிவிட்டு இந்த உலகத்தில் உன்னை அதிகமாக நேசிக்கிறேன் என பிராச்சி பெயரை பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த அதிர்ச்சியடைந்த ரசிகர்கள், மஹத்திடம் நீங்கள் யாரை காதலிக்கிறீர்கள் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.