1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 27 ஆகஸ்ட் 2018 (15:12 IST)

பேரு கெட்டு போச்சு ; காதலும் விட்டு போச்சு : என்ன செய்யப் போகிறார் மகத்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது பெயரை கெடுத்துக்கொண்டு நிகழ்ச்சியிலிருந்து மகத் வெளியேறியுள்ளார்.

 
வெங்கட் பிரபுவின் படங்களில் தலை காட்டி நடித்துக்கொண்டு ஜாலியாக சுற்றுக்கொண்டிருந்த நடிகர் மகத், பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பிக்பாஸ் வீட்டில் மற்ற போட்டியாளர்கள் இருந்தாலும், யாஷிகா மற்றும் ஐஸ்வர்யாவுடன் அவர் நெருக்கம் காட்டினார். ஐஸ்வர்யாவுடன் நட்பாக பழகுவதாக காட்டிக்கொண்ட மகத், யாஷிகாவுடன் மிக நெருக்கம் காட்டினார். ஒரு கட்டத்தில் அவரை காதலிக்கிறேன் எனவும் கூறி, அவருக்காக வெளியே காத்திருக்கும் அவரின் காதலி பிராச்சிக்கு பேரதிர்ச்சியை கொடுத்தார். 
 
யாஷிகா மற்றும் ஐஸ்வர்யாவின் நடவடிக்கைகள் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. குறிப்பாக எப்போதும் சண்டை போட்டு கத்திக்கொண்டே இருக்கும் ஐஸ்வர்யாவை ரசிகர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. எனவே, அவர்களுடன் நெருக்கமாக இருந்த மகத்தையும் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. அதோடு, தாடி பாலாஜி, டேனியல் ஆகியோரிடம் அடிக்கடி சண்டை போட்டு பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பவர்களின் கோபத்திற்கு ஆளானார்.
 
எனவேதான், நேற்றைய நிகழ்ச்சியில் பிக்பாஸ் வீட்டிலிருந்து மகத் வெளியேற்றப்பட்டார். அதாவது, தனது நடவடிக்கைகள் காரணமாக பெயரையும் கெடுத்துக்கொண்டதோடு, தனது காதலையும் மகத் இழந்துள்ளார். 
 
மகத்தை மன்னித்து பிராச்சி மீண்டும் அவரை ஏற்றுக்கொள்வாரா அல்லது பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் யாஷிகாவுடன் அவர் காதலை தொடர்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.