புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 8 டிசம்பர் 2018 (11:28 IST)

"தனிக்காட்டு ராஜாடா நம்மாளு" மாரி கெத்து குத்து சாங் !

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள மாரி 2 படத்தின் இரண்டாவது சிங்கிளான மாரி கெத்து பாடல் வெளியானது. 


 
தனுஷ் நடிப்பில் வெளியான மாரி படத்தின் இரண்டாம் பாகமான மாரி 2 தற்போது ரிலீசுக்கு ரெடியாக உள்ளது. கிறிஸ்துமஸ் ரேசில் உள்ள இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்ரபை கூட்டி உள்ளது. இந்த படத்தில் பிரேமம் சாய் பல்லவி தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். 
 
முதல் பாகத்தை இயக்கிய பாலாஜி மோகன் தான் இந்த படத்தையும் இயக்கி உள்ளார். இதனை தனுஷின் வண்டர்பார் மூவிஸ் தயாரித்து உள்ளது.  மேலும் முதல் படத்தில் அனிருத் தர லோக்கலாக இசையமைத்திருப்பார். ஆனால் இந்த படத்தில் அனிருத்தை கழட்டிவிட்டு யுவன் சங்கர் ராஜாவை தேர்வு செய்துள்ளார்கள். 
 
இந்நிலையில் தற்போது வெளிவந்துள்ள "மாரி கெத்து" செகண்ட் சிங்கள் டிராக் தூள் கிளப்பியுள்ளது. யுவனின் இசையில் மாரி தெறிக்கவிடுகிறார். பாடலின் பிஜிஎம் வேற லெவலில் அமைந்துள்ளது. கெத்து  பாடலை கேட்டவுடனே குத்தாட்டம் போட தோன்றும் அளவிற்கு அவ்வளவு எனர்ஜிடிக் பாடலாக அமைந்துள்ளது.