'மாரி 2' செகண்ட் சிங்கிள் தேதி, நேரம் அறிவிப்பு

Last Modified வெள்ளி, 7 டிசம்பர் 2018 (21:51 IST)
தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள 'மாரி 2' திரைப்படம் வரும் 21ஆம்
தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்சிங்கிள் பாடலான 'ரெளடி பேபி பாடல் சமீபத்தில் வெளியாகி பட்டிதொட்டியெங்கும் தாளம் போட வைத்தது.

இந்த நிலையில் 'மாரி 2' படத்தின் செகண்ட் சிங்கிள் ரிலீஸ் குறித்த தேதி மற்றும் நேரம் ஆகிய விபரங்களை தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதன்படி இந்த படத்தின் செகண்ட் சிங்கிள் பாடல் நாளை காலை 11 மணிக்கு வெளியாகவுள்ளது.

'மாரி கெத்து' என்று தொடங்கும் இந்த பாடலை யுவன்ஷங்கர் ராஜா கம்போஸ் செய்தது மட்டுமின்றி இந்த பாடலை எழுதியது அவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ், சாய்பல்லவி, வரலட்சுமி, டோவினோ தமஸ், ரோபோசங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :