வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 6 பிப்ரவரி 2019 (13:20 IST)

விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பாடலாசிரியர் விவேக்..! நடந்தது என்ன?

தமிழ் சினிமா ரசிகர்களின் முடிசூடா மன்னனாக திகழ்பவர் தளபதி விஜய்.  அவர் தற்போது அட்லீ இயக்கத்தில்  தளபதி 63 படத்தில் நடித்துவருகிறார் .இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார். மேலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் விவேக்,யோகிபாபு என மிகப்பெரும் நட்சத்திர பட்டாளம் நடிக்க , நடிகர் கதிர் இப்படத்தில்  முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.


 
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். கடந்த ஜனவரி மாதம் 20ம் தேதி இந்த படத்தின் ஷூட்டிங் சென்னையில் உள்ள பின்னி மில்லில் பூஜையுடன் தொடங்கி ஆரம்பமானது. இதனை அடுத்து படப்பிடிப்பு தளங்களில் இருந்து போட்டோக்களும் , வீடியோக்களும் வந்தவண்ணமாகவே இருந்தது. 
 
இந்நிலையில் விஜய் ரசிகர்களுக்கு இன்பத்தை ஊட்டும் விதத்தில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது நெருங்கிய நண்பரும் தளபதி 63 படத்தின் பாடலாசிரியருமான விவேக்குக்கு நேற்று ஒரு ட்வீட் செய்தார்.அதில், தளபதி 63 பற்றிய அடிக்கடி அப்டேட் கொடுங்கள் என்று கூறியிருந்தார்.  


 
இதனையடுத்து,  பாடலாசிரியர் விவேக் நண்பர்  சந்தோஷுக்கும் , தளபதி ரசிகர்களுக்கும் சேர்த்து பதிலளிக்கும் விதத்தில் ரீட்விட் போட்டார். அதில் அவர் கூறியதாவது, டியர் தளபதி ரசிகர்களே! உங்களுக்கு அப்டேட் குடுக்காமலே ... விரைவில் கொடுக்கிறேன்... கொடுக்கவில்லையென்றாலும் உங்கள் வீட்டு பிள்ளையாக நினைத்து மன்னித்து விடுங்கள் என நகைச்சுவையுடன் கூறியுள்ளார் .


 
சர்கார் படத்தில் பாடலாசிரியர் விவேக் கைவண்ணத்தில் உருவான அத்தனை பாடல்களும் நல்ல வரவேற்பு பெற்று சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததால் நிச்சயம் தளபதி 63 படத்தில் இடப்பெறும்  பாடலும் வேற லெவலில் இருக்கும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் விஜய் ரசிகர்கள்.