சர்கார்' சர்ச்சையின்போது மிரட்டல் வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்கள் கைது

Last Modified வியாழன், 6 டிசம்பர் 2018 (20:48 IST)
தளபதி விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படம் வெளியானபோது அந்த படத்தில் தமிழக அரசின் இலவச திட்டங்களை அவமதிக்கும் காட்சிகள் இருப்பதாக கூறி அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். அப்போது சர்கார்' படம் திரையிட்ட தியேட்டர்களில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் கிழித்து எரியப்பட்டது. விஜய்யை அதிமுகவினர் கடுமையாக விமர்சனம் செய்தனர்.

இந்த நிலையில் அதிமுகவினர்களை எச்சரிக்கும் வகையில் விஜய் ரசிகர்கள் இருவர் கத்தி, அரிவாளுடன் மிரட்டல் விடுத்த வீடியோ சமூக இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து அவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்களை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வந்தனர்.


இந்த நிலையில் மிரட்டல் வீடியோவை வெளியிட்ட சஞ்சய் மற்றும் லிங்கதுரை ஆகிய விஜய் ரசிகர்கள் இருவரும் இன்று கைது செய்யப்பட்டுள்ளதகவும், அவர்களிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :