ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 21 ஜூன் 2019 (15:28 IST)

மோகன்லால் படத்தில் லிடியன் நாதஸ்வரம் ! -புது அவதாரம்

மோகன்லால் இயக்கும் புதிய படத்திற்கு லிடியன் நாதஸ்வரம் இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

தி வேர்ல்ட் பெஸ்ட் என்ற நிகழ்ச்சியில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய லிடியன் நாதஸ்வரம் தன் அசாத்தியமான இசைத்திறமையால் இறுதிப் போட்டியில் தன் இரு கைகளாலும் இரு பியானோக்களை அதிவேகத்தில் மீட்டி உலக அரங்கில் சாதனைப் புரிந்தவர். இப்போட்டியில் வெற்றி பெற்ற லிடியன் நாதஸ்வரனுக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் இந்திய மதிப்பில் சுமார் ரு. 7 கோடி பரிசாக வழங்கப்பட்டது.

இதையடுத்து இந்தியா திரும்பிய அவருக்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் பாராட்டு விழா நடத்தி சிறப்பித்தார். இந்நிலையில் லிடியன் இப்போது புதிதாக மோகன்லால் இயக்கும் பரோஸ் எனும் படத்துக்கு இசையமைக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்தப்படம் போர்ச்சுக்கீசிய கதாபாத்திரத்தை மையமாக வைத்து உருவாகும் குழந்தைகள் படமாகும். இந்தப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.