மீனை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வதால் ஏற்படும் நன்மைகள்...!!

மீன்களில் அடங்கியுள்ள கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் மக்னீஷியம் ஆகிய தாதுச் சத்துக்கள் எலும்பு வளர்ச்சிக்கும், இரும்புச் சத்து இரத்தத்தில் சிவப்பணுக்கள் அதிகரிக்கவும் உதவுகிறது.
மீன்களில் நிறைந்துள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் வாய், உணவுக்குழாய், பெருங்குடல், கர்ப்பப்பை, மார்பகம் மற்றும் புரோஸ்டேட் ஆகிய பகுதிகளில் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை 30 முதல் 50 சதவீதம் வரையிலும் குறைக்கிறது.
 
இருதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகளைக் குறைக்கிறது. மேலும் இரத்தக் குழாயின் நீட்சித் தன்மை அதிகரிப்பதோடு உடலில் கெட்ட கொழுப்பு படுவதை குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க வழிவகைச் செய்கிறது.
பெண்கள் கர்ப்பக்காலத்தில் மீன் உண்ணுவதால் குறைப்பிரசவத்தை தவிர்க்கலாம். தாய்ப்பாலை அதிகரிக்கவும், தாயின் எலும்புகளுக்கு வலுசேர்க்கவும்கூட மீன் உணவு பயன்படுகிறது.
 
மீன் உண்ணும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா ஏற்படும் வாய்ப்பு குறைகிறது. தொடர்ந்து மீன் உண்ணுவதால், எலும்புத் தேய்வு, சொரி சிரங்கு மர்றும் நோய் எதிர்ப்புத் தன்மை குறைவால் ஏற்படும் நோய்கள் போன்றவற்றைக் குறைக்கிறது.
மருத்துவகுணம் நிறைந்த மத்தி மீனை சர்க்கரை நோய் உள்ளவர்கள், சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு திறன் அதிகரித்து ரத்தத்தில் சர்க்கரையின்  அளவை கட்டுப்படுத்தலாம்.
 
மீன் சாப்பிடுவதன் மூலம் அதிக நாட்கள் உயிர்வாழ முடியும் என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மீனில் உள்ள ஒமேகா 3 ஃபேட்டி அமிலம், கேன்சர், இதய கோளாறுகள் ஏற்படாமல் தடுப்பதுடன் அதிக காலம் உயிர்வாழ உதவுகிறது.
 
மீன் உட்கொள்பவர்களின் தோல் மற்றும் நகங்கள் உறுதியாகவும், கண் பார்வை தெளிவாக இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. உடல் எடையை குறைக்கக்கூடிய புரதச் சத்து, மீன்களில் அதிக அளவு இருப்பதால் உடலுக்கு மிகுந்த நன்மை அளிக்கிறது. மீனை அடிக்கடி உணவில்  சேர்த்து கொள்வதால், எந்த வியாதிகளும் நம்மை அண்டாது.


இதில் மேலும் படிக்கவும் :