இந்த படத்தை பார்த்து தியேட்டரில் பயத்தில் அலறிய ரசிகர்கள்
'மிலண்ட் ராவ் இயக்கத்தில் சித்தார்த்-ஆண்ட்ரியா நடித்துள்ள அவள் படம் கடந்த 3ஆம் தேதி வெளியானது. இப்படம் திரில்லர் திகில் அனுபவத்தால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
திகில் கதையாக உருவாகி வரும் ‘அவள்’ படத்தில், ஆண்ட்ரியா, சுமன், அதுல் குல்கர்னி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் சித்தார்த் படத்தை தயாரித்து, நடித்துள்ளார்.
இப்படம் கடந்த 3ஆம் தேதி வெளியாகி பார்வையாளர்களை பயமுறுத்தி வருகிறது. மிலண்ட் ராவ் இயக்கத்தில் சித்தார்த், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான அவள் ஹாரர் படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தை பார்த்தவர்களால் பயப்படாமல் இருக்க முடியவில்லை என்று தொடர்ந்து ரசிகர்கள் ட்வீட் செய்து வருகிறார்கள்.