ஹாலிவுட் பிரபலத்திடமிருந்து பாராட்டு; நடிகர் சித்தார்த் ட்வீட்
மிலண்ட் ராவ் இயக்கத்தில் சித்தார்த்-ஆண்ட்ரியா நடித்துள்ள அவள் படம் கடந்த 3ஆம் தேதி வெளியானது. இப்படம் திரில்லர் திகில் அனுபவத்தால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இப்படத்தின் திரைக்கதை படத்திற்கு பலம் சேர்த்திருப்பது போல, ஷ்ரேயஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவும், கிரிஷின் பின்னணி இசையும் படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. ஒலி வடிவமைப்பு பணிகளை விஜய ரத்னம், விஷ்ணு கோவிந்த் வடிவமைத்திருந்தார். அந்த வகையில் படத்தின் ஒலி வடிவமைப்புக்கு ஹாலிவுட் பிரபலத்திடமிருந்து பாராட்டு கிடைத்துள்ளதாக சித்தார்த் அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில் ஹாலிவுட் பிரபலம் தி கிரேட் ரிச்சர்டு கிங் 'அவள்' படத்தின் ஒலி வடிவமைப்புக்கு பாராட்டுக்களை தெரிவித்திருக்கிறார். இது சிறந்த தருணம் என்று ட்வீட் செய்துள்ளார் நடிகர் சித்தார்த்.