1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 27 பிப்ரவரி 2019 (12:21 IST)

போதும் தியேட்டரை விடுங்க! அமேசான் பிரைம்ல ‘விஸ்வாசம்’ படம் செய்த சாதனையை பாருங்க!

ஆன் லைன் நிறுவனமான அமேசான் ப்ரைம் வீடியோவில் விஸ்வாசம் படம் செய்த சாதனையை அஜித் ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்.


 
அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் பொங்கல் விருந்தாக கடந்த மாதம் 10 ஆம் தேதி வெளியான விஸ்வாசம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வசூலில் அபார சாதனையை படைத்தது. மேலும் இதுவரை வந்த அஜித் படத்திலேயே விஸ்வாசம் தான் மிகப்பெரிய வெற்றி படைத்துள்ளதாகவும் யூகிக்கப்படுகிறது .  
 
விஸ்வாசம் படம் வெளியாகி 6 வாரங்களை கடந்தும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும், தற்போது வரை தமிழகத்தில் மட்டும் இந்த படம் 150 திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. 
 
இந்நிலையில் படத்தின் வெற்றியை குறித்து பேசிய விநியோகிஸ்தர் கூறியதாவது,  விஸ்வாசம் படத்தின் வசூல் குறித்தும் , ஹிட் குறித்தும் எங்களிடம் ஒரு மில்லியன் கேள்விகள் கேட்டாலும் நாங்கள் சொல்வது ஒரே ஒரு பதில்தான். அதாவது , தமிழ் சினிமாவின் மாபெரும் வெற்றிப்படம் என்றால் அது விஸ்வாசம் தான் என்று ஆணித்தனமாக சொல்கிறார் படத்தின் விநியோகிஸ்தர். 
 
விஸ்வாசம் படம் வெளியாகி 50 வது நாளை நெருங்கிவரும் நேரத்தில் இந்தப்படத்தை பிரபல ஆன் லைன் நிறுவனமான அமேசான் ப்ரைம் வீடியோ வலைதளத்தில்  விஸ்வாசம் படம் வெளியிடப்பட்டது. படத்தை வெளியிட்ட சில மணி நேரத்தில் அமோக வரவேற்பை பெற்று ஒரே நாளில் அதிகம் பேர் பார்த்த தமிழ் படம் விஸ்வாசம் என்ற அசைக்கமுடியாத சாதனையை படைத்துள்ளது இப்படம். இதனை அஜித் ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்.