பக்கத்து ஸ்டேட்லயும் தல யோட மாஸ் பார்த்தய... விஸ்வாசம் தகவலால் ரசிகர்கள் உற்சாகம்
தல அஜித் நடித்துள்ள விஸ்வாசம் திரைப்படம் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு மார்ச் ஒன்றாம் தேதி வெளியாகிறது.
சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்திருந்த படம் விஸ்வாசம். அப்பா மகள் சென்டிமென்ட் காரணமாக விஸ்வாசம் திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. குடும்பம் குடும்பமாக சென்று ஏராளமானோர் விஸ்வாசம் படத்தை பார்த்தால் வசூலில் பெரிய சாதனை படைத்துள்ளது. இதையடுத்து தெலுங்கு மற்றும் கன்னடத்தில் விஸ்வாசம் படத்தை டப்பிங் செய்து வெளியிட முடிவு செய்யப்பட்டது. மார்ச் ஒன்றாம் தேதி கன்னடம் மற்றும் தெலுங்கில் இப்படம் வெளியாகிறது. தெலுங்கில் விஸ்வாசம் திரைப்படம் சுமார் 400 திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.