புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 26 பிப்ரவரி 2019 (16:27 IST)

அஜித்த பற்றி இப்படியா பேசறது ...?பிரபல வாரிசு நடிகை ’ஓபன் டாக் ’

அரசியலில் மட்டும் வாரிசு இருக்கக்கூடாது என்று சொல்லியிருக்கிறார் நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமஹாசன். தெளிவாகவே சொல்லியுள்ளார். அதாவது சினிமாவில் அவரது இரு மகள்களும் சினிமாவில் நடித்துக்கொண்டிருக்கிறார்கள் அல்லவா..? அதனால்..சரி! அப்பாவின் அரசியல் களம் இப்படி இருக்க ஸ்ருதிஹாசன் பிஸி நடிகையாக வலம் வருகிறார்.
வேலூர் தொழில்நுட்பக் கல்லூரியில் ரிவேரா 2019 என்ற கலைநிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஒரு  பகுதியான இறுதி விழாவிற்கு வருகை தந்த நடிகை ஸ்ருதிஹாசன் மானவர்களுடன் கலந்துரையாடினார்.
 
இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் விறுவிறுப்பாக பதில் கூறினார். தனக்கு பிடித்த நடிகர் கமல்ஹாசன் என்று தெரிவித்தார்.
மேலும் தனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் ஒருவர் ‘அஜித் ’தான் என்றும் அவர் தெரிவித்தார். விழாவில் மாணவர்களுக்கு அறிவுரையும் வழங்கினார்.
 
வேலூர் தொழில்நுட்பக்கல்லூரி மாணவ மாணவிகள் ஸ்ருதிஹாசனுக்கு மிக உற்சகமாக வரவேற்பளித்தனர்.