வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 26 பிப்ரவரி 2019 (19:24 IST)

ஒரு நகரையே காணவில்லை: 'சிட்டிசன்' பட பாணியில் புகார் அளித்த பொதுமக்கள்

அஜித் நடித்த 'சிட்டிசன்' படத்தில் 'அத்திப்பட்டி' என்ற நகரே திடீரென காணாமல் போய்விடும். அதனை ஒரு சிபிஐ அதிகாரி கண்டுபிடிப்பார். இதேபோல் சென்னை புழல் அருகே உள்ள தனலட்சுமி நகர் என்ற பகுதியே வாக்காளர் பட்டியலில் காணவில்லை என அப்பகுதி மக்கள் புகார் அளித்தனர்.
 
கடந்த சனிக்கிழமை வாக்காளர் பட்டியலில் புதிதாக இணைய, சரிபார்க்க ஒரு வாய்ப்பு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இதனையடுத்து சென்னை புழல் அருகே 80 குடும்பங்களை கொண்ட தனலட்சுமி நகர் என்ற பகுதியை சேர்ந்த சிலர் தங்களுடைய வாக்காளர் பட்டியலை சரிபார்க்க சென்றனர். ஆனால் வாக்காளர் பட்டியல் லெட்ஜரில் தனலட்சுமி நகர் என்ற பகுதியே இல்லை. அந்த பகுதி வாக்காளர்கள் அனைவருக்கும் வேறொரு பகுதியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது
 
இதனையடுத்து அந்த பகுதி மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டனர். எங்கள் பகுதி எப்படி வாக்காளர் பட்டியல் லெட்ஜரில் காணாமல் போனது என சரமாரியாக கேள்வி கேட்ட அப்பகுதி மக்கள் மீண்டும் தனலட்சுமி நகரிலேயே வாக்குச்சாவடி அமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.